
புயல் வெள்ளதால் பாதிக்கட்ட தாம்பரம் மாநகராட்சி சசிவரதன் நகரில் 1000 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அரிசி, மளிகை பொருள்கள் தொகுப்பு, போர்வை உள்ளிட்ட நிவரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார்கள், மாவட்ட தலைவர் ஜாகீர்உஷேன், பொருளாளர் இஸ்மாயில், வழங்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹில்லாஹ் :-
புதிய நாடாளுமன்ற கட்டிடம் மோடியின் பெருமைகாக கட்டப்பட்டது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை இதனால் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே கூட்டம் நடத்திட வேண்டும் என்றார்.
பாஜக பெரும்பான்மை உள்ளதால் ஜனநாயகம் செய்துமடியும் விதமாக தேர்தல் ஆணையர் உறுப்பினர்கள் சீர் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர்.
இதனை அனைத்து ஜனநாயகத்தை விரும்பும் கட்சிகள் எதிர்த்திட வேண்டும். அதுபோல் ஜனநாயகத்தை காத்திட மின்னணு வாக்கு இயந்திர முறையை மாற்றுவிட்டு பழைய வாக்குசீட்டு முறையை கொண்டுவரவேண்டும் அதற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பு எழுந்திட வேண்டும் என்றார்.
19ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் தனும் பங்கேற்க உள்ளதாக ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.