
செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அமோசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.