
பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் கல்வி நிலையங்கள் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.
மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப்பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.
கோவையில் தகவல் தொழில் நுட்பபூங்கா 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.