ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த முடிவு செய்துள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. போதுமான கட்டமைப்பு வசதியும் ஆசிரியர்களும் இருந்தால் அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.