தக்காளி விலை மேலும் குறைவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது. ஆக.2 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.  அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தக்காளி விலை ரூ.60 ஆக குறையும்

கர்நாடகாவின், கோலாரில் உற்பத்தியாகும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். ஆனால், தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக தக்காளி செல்வதில்லை. விலை உயர்வால், மக்களிடம் தக்காளி பயன்பாடும் குறைந்துள்ளது. இந்நிலையில் கோலாரில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-70க்கு விற்கப்படும் என வியாபாரிகள் கூறினர். அதற்கு, இன்னும் 1 மாதம் காத்திருக்க வேண்டும்.

சென்னை, கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ₨110க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்துள்ளது. 1,100 டன் தேவைப்படும் நிலையில் 400 டன் வந்துள்ளதால் தக்காளி விலையேற்றம் கண்டுள்ளது.

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று(ஜூலை 17) கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்ற நிலையில், இன்று ரூ.120க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

2 டன் தக்காளியை லாரியுடன் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்!

2 டன் தக்காளி கடத்தல் – பரபரப்பு சம்பவம்! கர்நாடகா: தனது நிலத்தில் விளைந்த 2.5 லட்சம் மதிப்பிலான, 2 டன் தக்காளியை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்திச் சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை

இலவசமாக ஒரு கிலோ தக்காளி, குடை தாம்பரம் அதிமுகவினர் அசத்தல்

கிழக்கு தாம்பரம் ஆண்டாள் நகர் பூங்கா அருகே 47 வார்டு அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளியுடன், குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்ச டி.கே.எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஒருகிலோ தக்களியுடன், குடையும் வழங்கினார்கள். தக்களி விலை கிலோ 120 க்கு விற்கும் நிலையில் குடையுடன் ஒருகிலோ தக்காளி வழங்கியதால் பெண்கள் ஆண்கள் என ஆர்வத்துடன் […]

சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை குறைந்தது!

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 40 குறைந்து, ₹80 மற்றும் ₹90க்கு விற்பனை! நேற்று ₹130க்கு விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ₹100க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ ₹100 வரை குறைந்துள்ளது. […]

அதிகரிக்கும் தக்காளி விலை: சமையலில் தக்காளிக்கு பதிலாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் தெரியுமா?

தினசரி சமையலில் சுவைக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தக்காளி. ஆனால் தற்போது தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இப்படியே போனால், தக்காளியை நாம் கண்ணால் பார்க்க முடியுமே தவிர, சுவைக்க முடியாமல் போய்விடும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தக்காளியின் விலை குறையும். அதுவரை தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவைக்கும், நிறத்திற்கும் ஒருசில மாற்று பொருட்களைப் பயன்படுத்தலாம். […]