தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்-தலைமைச் செயலாளர்

போதைப்பொருள் தடுப்பு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, குன்றத்தூர்‌ வட்டம்‌ படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா,‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ தேசிய நல்வாழ்வு குழம இயக்குநர்‌ ஷில்பா பிரபாகர்சதீஷ்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கலைச்செல்வி மோகன்‌, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ செல்வகுமார்‌, ஸ்ரீபெரும்புதூர்‌ கோட்டாட்சியர்‌ சரவண கண்ணன்‌, சுகாதாரப்‌ பணிகள்‌ துணை இயக்குநர்‌ மரு. பிரியா ராஜ்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

தமிழகத்தின் 49 ஆவது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989ல் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். 2016ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார். காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கியவர்: நாகை ஆட்சியராகவும் பணியாற்றினார். போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றிவர் சிவ்தாஸ் மீனா. நகராட்சி நிர்வாகம் – நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, அடுத்த தலைமை செயலாளராக நியமனம்.