நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர்: இஸ்ரோ

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் கண்டுபிடித்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன் இருப்பதையும் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தகவல். பிரக்யான் ரோவர் ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல். ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope எனும் கருவி தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

இஸ்ரோவில் இஸ்லாமிய தமிழச்சி

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சார்ந்தவர் ரிஹானா பர்வீன்பெங்களூரு ISRO வின் புரஜக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வாழ்த்துகள்.

சந்திராயன்-3 விண்கலம்: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி பாராட்டு

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. இஸ்ரோ நேற்று மலை மாபெரும் சாதனையை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு நடத்த உள்ளது.

நிலவின் தட்டையான மேற்பரப்பை தேர்ந்தெடுத்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ முக்கிய அப்டேட்

நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவின் தட்டையான மேற்பரப்பில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சற்றுமுன்னதாக, நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய தளத்தின் ஒரு பகுதியை புகைப்படம் காட்டுகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் கால், அதனுடன் நிழலும் தெரிகிறது. மேலும் […]

சந்திரயான் 2 மற்றும் 3 இடையே தகவல் தொடர்பு: இஸ்ரோ கொடுத்த “குட் நியூஸ்”

சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ம் […]

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும்: ISRO தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும் என ISRO தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு லேண்டர் விக்ரம் நிலவு மேற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ISRO, ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இணைந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு. ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 153×163 கி.மீ-ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நாளை பிரிக்கப்படுகிறது; ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.