பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல்.! இஸ்ரோ எச்சரிக்கை.!

பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. அப்போபிஸ் என்ற இந்த விண்கல் 13 ஏப்ரல் 2029 பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானம் அளவிற்கு பெரியதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது போன்ற மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை என கூறப்படுகிறது.

தனியார் பங்களிப்புடன் புதிய வகை ராக்கெட் அறிமுகம் – இஸ்ரோ

ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி- இஸ்ரோ செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்ட அக்னிபான் ராக்கெட் திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கும் ராக்கெட் இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் எந்திரத்தை கொண்டுள்ளது அக்னிபான் ராக்கெட்

ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி!

ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜினிக் எஞ்சின் வடிவமைப்பில் இறுதி சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்து சக்தி மற்றும் செயல்திறன் ஆகியவை வெற்றிகரமாக சோதனையிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு, கரக்பூர் ஐஐடி.யின் வாழ்நாள் சாதனையாளர் விருது

கேரளாவின் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக நாராயணன் பணியாற்றி வருகிறார்.

2040-ல் சந்திரனுக்கு இந்திய வீரர்கள் பயணம் சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்பத் திட்டம்

சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகஇஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

நிலவுக்கு சந்திரயான் 3, சூரியனுக்கு ஆதித்யா எல்1 திட்டங்களுக்கு பின், வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக உள்ளது

எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலம் சுக்ராயனை போல் நச்சுத்தன்மையுடையதாக மாறும் என்பதால் இத்திட்டம் முக்கியத்துவமுடையதாகும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்!

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்! 2012ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக பணியாற்றினார்; கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார்.

பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்1 விண்கலம்

விண்ணில் ஏவப்பட்ட சரியாக 1 மணி நேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து விண்கலத்தை பிரிக்கும் நிகழ்வு வெற்றிகரமாக முடிந்தது. ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை நோக்கி 125 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.