தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், மதுரை மேலூரில் இன்று காலை நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் ஆகியுள்ளது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்
தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர் சிவக்குமார்!
தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல்
தீபாவளிக்குப் பின் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்ப்பு.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..

அக்டோபர் 29 – நவம்பர் 12 வரை 15 நாட்களுக்கு, 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவிப்பு
தீபாவளி முன்பதிவு-டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு

ஜூலை 12-ம் தேதி முதல் தொடக்கம் என தென்னக ரயில்வே அறிவிப்பு!