சந்திராயன் விண்கலம் நிலவில் பத்திரமாக தரையிறங்கியதற்காக 1008 திருவிளக்கு ஏற்றி சிறப்பு பிரார்த்தனை

கோவை மாவட்டம், காரமடை அருகில் ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பசாமி கோயில் வளாகத்தில் சந்திராயன் விண்கலம் நிலவில் பத்திரமாக தரையிறங்கியதற்காக 1008 திருவிளக்கு ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
சந்திராயன்- 3 இயக்குனர் வீரமுத்துவேல் சாய்ராம் கல்லூரி பழைய மாணவர்

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் படிர்ர் தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட திரையில் சந்திரயான்-3 வின்கல விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் காட்சியை கண்டுகளித்தனர். இந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் தான் சந்திரயான்-3 முழு திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் தனது முதல் மெக்கனிகல் பி.டெக் பொறியியல் படிப்பை 1998 ல் துவங்கினார். ஏற்கனவே டிப்ளோமா படித்த அவர் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து 2001 வரை மூன்று […]
சந்திராயன்-3 விண்கலம்: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி பாராட்டு

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. இஸ்ரோ நேற்று மலை மாபெரும் சாதனையை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு நடத்த உள்ளது.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி: நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரயான் – 3 சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. முன்னதாக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் […]
நிலவின் தட்டையான மேற்பரப்பை தேர்ந்தெடுத்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ முக்கிய அப்டேட்

நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவின் தட்டையான மேற்பரப்பில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சற்றுமுன்னதாக, நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய தளத்தின் ஒரு பகுதியை புகைப்படம் காட்டுகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் கால், அதனுடன் நிழலும் தெரிகிறது. மேலும் […]
சந்திரயான் திட்டத்தில் ஹீரோவான தமிழர்கள்…

இந்தியாவின் கனவான நிலவு திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நாளை தரையிறக்கவுள்ளனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டிருக்கும் தருணத்தில், இந்தியாவின் சந்திரயான் – 3 திட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், சரித்தரம் படைக்கவுள்ள நிலவு பயணத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு […]
சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறக்கும் பணி தொடக்கம்

புதுடெல்லி: சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் வெளியேறியது. ரோவர் தரையிறங்கும் பணி இரவு 10 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இச்சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், […]
நிலவில் தடம் பதித்த இந்தியா துணை நின்ற திருநெல்வேலி

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி பயணத்தை நிகழ்த்தி நிலவில் தடம் பதித்த ISRO விஞ்ஞானிகளையும் அதற்கு சிறந்ததோர் பங்களிப்பை அளித்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் பாராட்டுவதில் திருநெல்வேலி மாவட்டம் பெருமை கொள்கிறது!
சந்திரயான்-3 வெற்றி மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

செப்டம்பர் 6, 2019 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாரால் நிலவின் மேற்பரப்பில் மோதியது. சந்திரயான் 2 திட்டத்தின் தரையிரங்கும் திட்டம் தோல்வி அடைந்த நிலையில், ஆர்பிட்டர் தொடர்ச்சியாக சுற்றி வந்தது. இதனால் ‘சந்திரயான்-2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. பகுதியாக […]