2040-ல் சந்திரனுக்கு இந்திய வீரர்கள் பயணம் சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்பத் திட்டம்
சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகஇஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.
சந்திராயன்-&-3 இயக்குனர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம்
வருகிற அக்டோபர் 3ந் தேதி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்கள் வழங்குகிறார். இதில் பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திராயன்-3 இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார்-.
நிலவில் சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிடத்தை படம்பிடித்த நாசாவின் லூனார் ஆர்பிட்டர்
சந்திரயான்-3 குறித்து நாசா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்.. நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ. தொலைவில் லேண்டர் நிலை கொண்டுள்ள புகைப்படம்.
சந்திரயான் – 3 வெற்றி குறித்த கட்டுரை அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்
இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன் – அமைச்சர் அன்பில் மகேஷ்
நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம்,கால்சியம் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதைபிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது;
சந்திராயன் – 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி எனபெயர் சூட்டிய மோடி
இந்திய விண்கலம் சந்திராயன் -3 நிலவில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் செயற்கைக்கோளின் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி முனை என்று பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தபோது இந்த பெயரை சூட்டினார். இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 2- இறங்கிய இடத்திற்கு திரங்கா (மூவர்ண கொடி) என்று மோடி பெயர் சூட்டியுள்ளார்.
சந்திராயன்-&-3 விண்கலம்
சந்திராயன்-&-3 விண்கலம் நிலவில் இறங்கியதை தொடர்ந்து குரோம்பேட்டை சமூக சேவகர் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி பல்லாவரம் ரேடியல் ரோட்டில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார். மேலும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் திரண்டு சென்று அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் வி.சந்தானம், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சந்திரயான் – 3 வெற்றியும் இங்கிலாந்து வயிற்றெரிச்சலும்
நிலவின் தென் துருவத்தில் யாரும் இதுவரை செல்லாத இடத்தில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக இறங்கி படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.இந்த சாதனையை உலகமே பாராட்டி வருகிறது. இருந்தாலும் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு நாடு இப்படி சாதனை படைக்கிறதே என்ற வயிற்று எரிச்சல் இங்கிலாந்து காரர்களுக்கு ரொம்பவே உள்ளது.அங்கே ஒரு செய்தி வாசிப்பாளர் இனிமேல் இந்தியா எங்களிடம் உதவி கேட்டு வரக்கூடாது.2016 முதல் 2021 வரை நாங்கள் வழங்கிய கோடிக்கணக்கான ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இது […]
இஸ்ரோவில் இஸ்லாமிய தமிழச்சி
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சார்ந்தவர் ரிஹானா பர்வீன்பெங்களூரு ISRO வின் புரஜக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வாழ்த்துகள்.
நிலவில் தடம் பதித்தசந்திராயன் திட்டத்தின் சாட்டிலைட் இயக்கத்தை செயல்படுத்த அயராது உழைத்த ஐ.எஸ்.ஆர்.ஓ வின் 12பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் உள்ள ஒருவர் குஷ்பூ மீர்ஷா.
அலிகார் முஸ்லிம் பல்கலைகழக முன்னாள் மாணவியான உத்தரப்பிரதேசம் சேர்ந்த மீர்ஷா, அப்துல் கலாமுக்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் உயர் பதவி வகிக்கும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் இவர்.