காவிரி நீர் விவகாரத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்

துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் 12 பேர் அடங்கிய குழு திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன் இடம் பெற்றுள்ளனர். சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி(இ.யூ.மு.லீ) இடம் பெற்றுள்ளனர்.
காவிரி வழக்கை உடனடியாக விசாரிக்க தமிழ்நாடு அரசு முறையீடு – வரும் 21ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நீதிபதிகள் கவாய், மிஸ்ரா அமர்வு முன்பு இவ்வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் என அறிவிப்பு. அடுத்த வாரம் விடுப்பில் செல்ல உள்ளதாக நீதிபதி கவாய் தகவல்; 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார். இதனால் வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்

காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிப்பு; டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி கர்நாடக அரசு நீர்திறப்பதை குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து நீர் திறப்பது குறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்ய உள்ளது.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து 8வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 10,302கனஅடி நீர்திறப்பு..!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,302கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,302கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 5,000கன அடியாக காணப்படுகிறது.