கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 6,500 அதிகரிப்பு;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரம் மற்றும் அஞ்செட்டி மலை பகுதி, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.
காவிரி நீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
காவிரி பிரச்சனையில் நீண்ட கால தீர்வு தமிழிசை வற்புறுத்தல்

சென்னை அடுத்த பம்மலில் உள்ள தனியார் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது:- விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் இந்தியர் வெற்றி பெருவதற்கு பிரதமரின் ஊக்கமே காரணம் என்றும், குறிப்பாக கிராம புற இளஞர்களை விளையாட்டு துறையில் வெற்றி பெற வைக்க கூடுதல் கவனம் எடுக்கபடுவதாகவும் தெரிவித்த அவர், மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் அவர்களே பின் வாங்கிய நிலையில் நாம் அதை பற்றி பேசாமல் ஒலிம்பிக் […]
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 5,803 கனஅடியாக குறைவு

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 7,973கனஅடியில் இருந்து 5,803 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,803 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கனஅடியாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.72 அடி; கபினி அணையின் நீர்மட்டம் 76.35 அடியாகவும் உள்ளது.
காவிரிப் பிரச்சனை: டெல்டா மாவட்டங்களில் ‘பந்த்’ போராட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு! காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய இடங்களில் இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, மடிக்கேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பகலாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து […]
தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஆணை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்.15 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட ஆணை!
காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு, பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் ஆணைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூற முடியாது – உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.