கந்தனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!!

கிருத்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாதம் 16ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல ஆக.12 முதல் 17 வரை அனுமதி

வத்திராயிருப்பு: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மலைக் கோயிலில் இரவில் தங்குவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. வட இந்தியாவில் புகழ்பெற்ற அமர்நாத், கேதர்நாத் கோயில்களை போல் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சதுரகிரி, வெள்ளையங்கிரி கோயில்கள் பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை […]
குரோம்பேட்டை அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

குரோம்பேட்டை அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா மூன்றாவது வார ஆடி வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை அம்மனுக்கு பதினொரு மணியளவில் சிறப்பு தீபாதாரணை நடைபெற்று 12 மணி அளவில் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர் அன்னதான உபயம் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் சந்திரசேகரன் மன்னா என்ற ராஜேஷ் கண்ணா 38 வது வார்டு மாமன்ற […]
நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடக்கம்

ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைக்கு ஏன் சிறப்பு?

ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆடி மாதம் வரக்கூடிய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்.வீடுகளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்து அருளை பெறலாம். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.அம்மன் ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிற்றுக்கிழமையன்று வீடுகளில் […]
அழகர்கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை, அழகர்கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று (ஜூலை 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருக்கு தேரோட்டம் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவதற்கான காரணம் என்ன…?

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும்.அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். […]
வம்சத்தை காக்கும் ஆடி மாத மாவிளக்கு வழிபாடு

ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும்.ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும். திரி நன்கு எரியும். நீளமான திரி […]
ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பது விசேஷமானது. அம்மன் தனியே மூலதெய்வமாக கொலுவிருக்கும் கோவில்களில் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.அதே போல சிவன் கோவில்களில் தனி சந்நதியில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கும் பிரத்யேக ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன.அம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை மேற்கொண்டு அம்பிகையை மகிழ்விக்கிறார்கள்.அந்த வகையில் இங்கே சில அம்மன்களை தரிசிப்போம்.சாமுண்டீஸ்வரிவலக்கரங்களில் சூலம்,கத்தி,சக்தி, சக்கரம்,அம்பு, சங்கம்,வஜ்ரம், அபயம்,உடுக்கை, சிறிய கத்தி.இடதுகரங்களில் நாகம்,பாசம், கேடயம்,கோடரி, அங்குசம்,வில்,மணி, கொடி,கண்ணாடி ஆகியன ஏந்தியிருக்கிறாள்.மகிஷாசுரன்தன் தலை […]