4 வது வார ஆடி வெள்ளி விளக்கு பூஜை
அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சதுர் குன்று விநாயகர் தேவி கருமாரியம்மன் புற்று ஆலயத்தில் ஆடி நாலாவது வார வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்குகளை வைத்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி […]
குரோம்பேட்டை ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபா தாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அம்மனுக்கு வளையலால் சிறப்பு பந்தல் அமைத்தது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன […]
ஆடி கிருத்திகை முன்னிட்டு அஸ்தினாபுரம் ஸ்ரீ நவ பாசன தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆறுபடை வீடு முருக பக்தர்கள் சேவா சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது
இவ்விழாவில் கண்ணன், நாகராஜன், கிரி, பாபு, ரமேஷ், சண்முகம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்
மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சதுரகிரி மலை பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர். காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர்.
ஆடி வெள்ளி; துன்பங்களை நீக்கும் விரதம்
ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளி மிக சிறப்பு வாய்ந்தது. கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (ஆக.11) விரதம் இருப்பது குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாக்கும். காலை எழுந்ததும் அம்மனுக்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலை பால்பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து வைத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
ஆடி வெள்ளி; ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது நன்மை
இன்று (ஆக.11) ஆடி மாதம் 26ம் நாள். திதி: நாள் முழுவதும் ஏகாதசி. நட்சத்திரம்: மிருகசீரிஷம். யோகம்: அமிர்த யோகம். சூலம்: மேற்கு. பரிகாரம்: வெள்ளம். சந்திராஷ்டமம்: விசாகம். பொதுப்பலன்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, புதிய விஷயங்களை தேடி கற்க, கிணறு, போர்வெல் போன்ற பணிகளுக்கு உகந்த நாள். இன்று ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது நன்மை அளிக்கும்.
ஆடி வெள்ளி அற்புத பலன்கள் :
தமிழ் வருடக் கணக்கின்படி 12 மாதங்களில் நான்காவதாக வருகின்ற மாதம் ஆடி மாதமாகும்.புவியியல் மற்றும் அறிவியல் அடிப்படையில் பார்க்கும் போது ஆடிமாதம் மழைக்காலத்திற்கு முன்பாக காற்று அதிகம் வீசும் ஒரே காலமாக இருக்கிறது.இரண்டு பருவ நிலைக்கு நடுநிலையான மாதமாக ஆடி மாதம் வருவதால் மனிதர்களுக்கு சில வகையான நோய்கள் இந்த மாதத்தில் அதிகம் ஏற்படுகின்றன.இதை போக்குவதற்காக தான் ஆடி மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவான கேழ்வரகு கூழ் தானமளிப்பதை விழாவாக அறிவியல் அடிப்படையில் நமது […]
ஆடி வெள்ளியில் பெண்களுக்கு புடவை,வளையல் வழங்கலாம்
வெள்ளிக்கிழமை என்பது எல்லா மாதத்திலுமே முக்கியத்துவம் வாய்ந்த நாள்தான். வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். சுக்கிர யோகம் கிடைக்க, வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடச் சொல்கின்றன ஞானநூல்கள்.ஆச்சார்யர்களும் வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமையில், மறக்காமல் காலையும் மாலையும் விளக்கேற்றி, மகாலக்ஷ்மி காயத்ரீ அல்லது மகாலக்ஷ்மி நாமாவளிகளைச் சொல்லி ஏதேனும் இனிப்பு நைவேத்தியமாகப் படைக்கலாம். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூ, செம்பருத்தி, ரோஜா முதலான மலர்களைச் சூட்டி வழிபடுங்கள்.கனகதாரா ஸ்தோத்திரம் […]