பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பு

மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தொடங்கியது 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டம் மாநாட்டு திடலுக்கு மொத்தம் 20 வழிகள்- அதில் 10 உள்ளே வரும் பாதை , 10 வெளியேறும் பாதை 80 ஏக்கர் பரப்பளவு இடத்தில் உள்ள 6 கிணறுகள் மூடப்படுகின்றன.
முறைகேடுகள் நடக்கும் 100 நாள் வேலை திட்டம் – நீதிபதிகள் வேதனை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்கு 100 நாள் வேலை திட்ட முறைகேடுகள் ” அதிகரித்து வருகிறது” தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 2020-21ஆம் ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலர், பழையகோட்டை பஞ்சாயத்து தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை.
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி, தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே திமுக அரசின் நோக்கம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]
தபால் துறையில் 44,228 காலியிடம்; பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி

தபால் அதிகாரி மற்றும் உதவி தபால் அதிகாரியாக பணியாற்ற, பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு; நாடு முழுவதும் 44,228 காலியிடங்கள் உள்ளன; தமிழகத்தில் மட்டும் 3,789 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,5ம் தேதி. தபால் துறையில் 44,228 பேருக்கு தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), உதவி தபால் அதிகாரி பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே.விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் கையாளும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். அனைத்து […]
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
நாடு முழுவதும் ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை

நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 38 சதவீத மாணவர்கள் வேலை தேடி வருகின்றனர். 2024-ல் 21,500 மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் 13,410 பேர் பணியில் சேர்ந்தனர்.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூபாய் 319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை

இந்த ஊதியம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணி நடப்பதால் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மெட்ரோ கட்டுமானப் பணிக்காக மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம். சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்படும். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம். அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் […]