காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால் கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 92 கோடி யூனிட் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் 9,100 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின்னுற்பத்தி சீசன் ஆகும். சீசன் சமயத்தில் வழக்கமாக காற்றாலைகளில் இருந்து தினமும் 8 முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். நடப்பு சீசனில் காற்றின் வேகம் போதிய அளவுக்கு இல்லை. […]