1.25 கோடி இந்திய சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவர்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமார் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் உலகளாவிய கூட்டமைப்பான ‘என்சிடி ரிஸ்க்’ மற்றும் […]