தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது…

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என கணிப்பு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கர்நாடகாவில் செப்.6,8,9,10-ல் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு. குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல். பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல். உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை
வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்

வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் […]
காஞ்சிபுரம், செங்கல்பட்டு கவனம்.. 10 மாவட்டங்களில் இடியோடு மழை அடி வெளுக்கும் ..குடை அவசியம்

சென்னை: தமிழ்நாட்டில்இன்று 10 மாவட்டங்களில்கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலைஆய்வுமையம் அறிவித்துள்ளது. இன்றுமுதல் 17 ஆம்தேதி வரைக்கும் தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சியின் காரணமாக, இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]