திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?
கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும் பழனிசாமி ஓரங்கட்ட நினைப்பதாக விசுவநாதனின் விசுவாச வட்டம் விசும்புகிறது. திண்டுக்கல் மாவட்ட அதிமுக-வில் நத்தம் விசுவநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் இருதுருவ அரசியல் நடத்துபவர்கள். இதைப் புரிந்துகொண்டு சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியையும், விசுவநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் கொடுத்து இருவரையும் சரிசமமாக பாவித்து வந்தார் பழனிசாமி.