ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா திருமணம்!

நானும் விஷாலும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” என்று —யோகி டா’ பட மேடையில் நடிகை சாய் தன்ஷிகா அறிவித்தார்.அப்போது விஷால் உடன் இருந்தார். .

கூவாகம் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்.

உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் திருநங்கை’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார்மேடையில் நடிகர் விஷால் திடீரென மயங்கி விழுந்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு […]

விஜயகாந்த் நல்ல மனதுடைய மனிதர், நல்ல அரசியல்வாதி”

“விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர்” “விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்” “விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்” “அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்”

நடிகர் சங்கத் செயலாளர் விஷால் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு

சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது

ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனிடையே, மகாராஷ்டிரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. லஞ்சம் […]

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்;

வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக் கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சி S.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை சரளா 2022-2023ம் […]

பிரபல நடிகையுடன் திருமணமா?; விஷால் விளக்கம்

சமீபத்தில் நடிகர் விஷாலும் நடிகை லஷ்மி மேனனும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், “இந்த தகவல் உண்மையல்ல. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த வதந்திக்கு நான் விளக்கம் அளிக்கிறேன். நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே அறிவிக்கிறேன்” என விஷால் விளக்கமளித்துள்ளார்.