விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக போவதாக பேச்சு அடிபடுகிறது இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது சிம்புவின் ஹேர் ஸ்டைல் முகபாவம் எல்லாம் விராட் கோலி போல இருப்பதால் இந்த செய்தி வெளியாகி உள்ளது .ஏற்கனவே சிம்பு பாடிய ஒரு படத்தின் பாடலை விராட் கோலி தனக்கு பிடித்ததாக கூறி தனது எக்ஸ தளத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால் […]

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்

விராட் கோலிக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனி மனம் திறந்தார். கோலியுடன் இணைந்து விளையாடியபோது அதிகமாக 2 மற்றும் 3 ரன்களை தாங்கள் எடுப்போம் என்றும் கோலியுடன் இணைந்து ஆடுவது ஜாலியாக இருக்கும் என்றும் தோனி கூறியுள்ளார்.

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை தொடரில், விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் மகீஷ் தீக்சனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் தொடரில் விராட்கோலியின் விக்கெட்டை தன்னால் கைப்பற்ற முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், விராட் கோலியின் விக்கெட்டே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.