21,000 விநாயகர் சிலை கண்காட்சியில் தமிழக கவர்னர் ஆர் என். ரவி.

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். விநாயகர் கண்காட்சி சிறப்பாக இருந்தாக ஆளுநர் பாராட்டினார். சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் […]
சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலை கண்காட்சி

சிட்லப்பாக்கத்தில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 17 வது ஆண்டாக 21 ஆயிரம் விநாயகர் சிலைகள், பொம்மைகள், படங்கள் என அரை சென்டிமீட்டர் முதல் 9 அடி உயரம் உள்ள சிலைகள் தயார் செய்தும், சேகரித்தும் அவரின் திருமண மண்டபத்தில் மூன்று அடுக்குகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார். முற்றிலும் இலவசமாக 11 நாட்கள் 07.09.24 முதல் 17.09.24 வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறக்கப்படும். இந்த […]
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் இந்து முன்னணி, தம்பராஸ், புருஷோத்தமன் நகர் மக்கள் இணைந்து நடத்திய விநாயக சதுர்த்தி விழாவில் விநாயகர் வைத்து வழிபாடு செய்தபோது எடுத்தபடம்

அருகில் விழாக்குழுவினர் த.வசந்தகுமார், நா.வேணுகோபால், சி.ஜெய்குமார், பிரபு வெங்கட்ராமன், செபாஸ்டின், ஸ்ரீதர் மற்றும் நகர மக்கள்.
சுபமுகூர்த்த தினம் மற்றும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை தொடர்ந்து உயர்வில் உள்ளது
மல்லிகை சில்லறை விலையில் கிலோ ₹800 ஆகவும், பிச்சி கிலோ ₹1200க்கும் விற்பனை
சர்ச்சைக்குரிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து – தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பட்டளர்கள், சிலை செய்வோர் உள்ளிட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பேருந்துகளில் 70,000 பேர் முன்பதிவு

முகூர்த்த தினம்,விநாயகர் சதுர்த்தி ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இந்த 3 நாட்களில் பயணம் செல்வதற்கு அரசு பேருந்துகளில் மொத்தம் 70000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று (செப்.5) சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 15 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பிரதிஷ்டை செய்ய தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

இந்தியா முழுவதும் நாளை (செப்.7) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல தெருக்களிலும் பிரம்மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளன. பல இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸை கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளை தவிர்த்து கிழங்கு மாவுகளைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளுக்கு பாதுகாப்பு ஏற்படாத வண்ணம் ரசாயனம் கலக்காத இயற்கை நிறமிகள் பூசப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி: சென்னை – கோவை சிறப்பு ரயில்.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 6 பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக 11:45-க்கு கோவை சென்றடையும். இதே போல் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சென்னையில் விநாயகர் சிலை வைத்து இருக்கும் விழா குழுவினரின் புலம்பல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்து தினமும் வழிபட்டு வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் கடற்கரைக்கு சிலைகளை எடுத்துக் கொண்டு விசர்ஜனம் செய்ய உள்ளனர். இந்த இடைப்பட்ட காலங்களில் விநாயகர் சிலை வைத்திருக்கும் விழா குழுவினர் பல்வேறு நல திட்ட உதவிகள், அன்னதானம், சம்பந்தி போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து வழங்கப்பட்டு வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் செய்தி எடுக்க வந்துள்ளதாக கூறி விழா குழுவினரிடம் […]
சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலை

சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 17ம் ஆண்டு விநாயகர் கண்காட்சியை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், E.மனோகரன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், இரா.விஜயகுமார் R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், ஆர்.பாலகுமரன், கே.நவீன்குமார், வ.ஜெயகுமார், ஜெ.நிர்மல், சீனிவாசன் டி.சம்பத், வாத்தியார் ராஜேந்திரன், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். உடன் விநாயகா குழுமத் தலைவர் சீனிவாசன்