சந்திராயன்-&-3 இயக்குனர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம்

வருகிற அக்டோபர் 3ந் தேதி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்கள் வழங்குகிறார். இதில் பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திராயன்-3 இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார்-.

சந்திராயன்- 3 இயக்குனர் வீரமுத்துவேல் சாய்ராம் கல்லூரி பழைய மாணவர்

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் படிர்ர் தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட திரையில் சந்திரயான்-3 வின்கல விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் காட்சியை கண்டுகளித்தனர். இந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் தான் சந்திரயான்-3 முழு திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் தனது முதல் மெக்கனிகல் பி.டெக் பொறியியல் படிப்பை 1998 ல் துவங்கினார். ஏற்கனவே டிப்ளோமா படித்த அவர் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து 2001 வரை மூன்று […]

சந்திராயன் -3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள […]