சிவகார்த்திகேயன் 10 லட்சம்”மிக்ஜாம் புயல்” பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் காசோலையைஅமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்
தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு – தேதி மாற்றம்

2023 டிசம்பர் 24 – ஞாயிறு அன்று நடைபெறும். தலைமைக் கழகம் அறிவிப்பு ! “மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும். தி.மு.க.தலைமைக் கழகம்,“அண்ணா அறிவாலயம்”சென்னை-18. நாள் : 08-12-2023
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்தப் பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் – கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்துப் பெற்றோம். தி.மு.க. இளைஞர் அணிமாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிசக் கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம்!
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை…

உச்சநீதிமன்றம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார். அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் & 2023 (F4)

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் & 2023 (F4) போட்டி சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (24.11.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளையாட்டுத் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம், சுற்றுலாத் துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை உட்பட பிற துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (24.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், பட்டேல் நகர், சென்னை மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மேயர் திருமதி ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, […]
“ரைடு விட்டால் நாங்கள் பயப்பட மாட்டோம்;

எங்கள் கிளை செயலாளர் கூட உங்களைப் பார்த்து பயப்படமாட்டான்; பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான்; என்னைப் பற்றி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார்”
சேலத்தில் நடைபெறும் 2-வது மாநில இளைஞரணி மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்;

மாநாடு மெயின் பிக்சர் என்றால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாளர்கள் கூட்டம் டிரைலர்”
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்ற தெரிவித்துள்ளது

சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை […]