உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி தங்க கொடி மரம் சேதம்

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொடியேற்றத்திற்கான கயிறை மரத்தின் உச்சியில் பொறுத்த முயற்சித்தபோது வளையம் உடைந்துள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]
திருப்பதி கோயில் உண்டியலில் நடந்த பெரும் திருட்டு

“பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் சொத்துகள் ஜெகன் மோகன் ஆட்சியில் அபகரிப்பு” – பகீர் கிளப்பும் பவன் கல்யாண்
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம்

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், முன்ஜாமின் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்
எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது

லட்டு பிரசாதம் கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு எஸ்ஐடியை நியமித்துள்ளது டிஐஜி சர்வ ஸ்ரேஸ்ட் திரிபாதி உள்ளிட்ட எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது முதல் ஏஆர் டைரியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை எஸ்ஐடி மேற்கொள்ளும் எஸ்ஐடி ஏற்கனவே டிஜிபியை சந்தித்து விசாரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளது
திருமலையில் பிற மதத்தினருக்கு புதிய நடைமுறை

ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் வேற்று மதத்தினர், “தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதில் கையப்பம் இட்டு அளிக்க வேண்டும்” – திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி லட்டு பிரச்னையால் வேதனை அடைந்துள்ளேன்

திருப்பதிக்கு 11 நாள் விரதம் இருக்கிறேன் துணை முதல்வர் பவன் கல்யாண்