தாம்பரம் மாநகராட்சிக்கு 4 புதிய குடிநீர் லாரிகள்

ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் மாநகராட்சி வாங்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தனர், இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்

டிப்பர் லாரிகளுக்கு சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டி: பெரம்பலூரில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

அதிக பாரம் ஏற்றுவதை நிறுத்தி, சரியான அளவை ஏற்றி, சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் டிப்பர் லாரிகளை இயக்காமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் இன்று முதல் தொடங்கியதால் 1000க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்காமல் முடங்கியதால் கட்டுமான தொழில் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.