தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது
தொடர் கனமழையால் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் தூத்துக்குடியில் மழை விடாமல் பெய்வதால் ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது. பயணிகள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் ரயில் நிலையங்களில் தவிப்பு
600 பேரின்உயிருக்கு ஆபத்து..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆழிக்குடி கிராமத்தைவெள்ளம் சூழ்ந்தது. இதனால், அக்கிராமத்தில் உள்ள சுமார் 600க்கும்மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அனவரதநல்லூர்-ஆழிக்குடி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு வெள்ளம்சூழ்ந்துள்ளது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால், உடனே தங்களைகாப்பாற்ற வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடிக்கு வரும் சாலை வழித்தடங்கள் அனைத்தும் நீர் வரத்துகளால் துண்டிக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய வாகன போக்குவரத்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.. மூன்றாவது மைல் மற்றும் அந்தோணியார் புரம் பகுதிகளில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் இருபுறமும் வழிந்து ஓடுகிறது.. அதேபோல திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாற்றுவடை அருகே சாலையின் இரு புறங்களிலும் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது.. அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய அந்த வாகனமானது தூத்துக்குடி கோமதிபுரம் அருகே உள்ள அந்த உப்பாற்று ஓடை மற்றும் கண்மாயினுடைய […]
தூத்துக்குடி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பேய் மழை வெள்ளம்.
திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு ;இடம் வசவப்பபுரம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர உத்தரவு

ஓய்வுபெற்ற அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை கைவிடப்பட்டதா என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – குற்றப்பத்திரிகை நிராகரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிகையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி புதியம்புத்தூர் கணவன்- மனைவி இடையே தகராறு கணவன்
தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே உள்ள ஓசனூத்தை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 51). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி குருவம்மாளின் நகைகளை மளிகை கடை பொருட்கள் வாங்குவதற்காக அடகுவைத்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கோவில் பிள்ளை நேற்று இரவு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே உறவினர்கள் […]