தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, தமிழ்நாடு அரசின்‌ 2024-2025ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு தாக்கல்‌ செய்தார்‌

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, தமிழ்நாடு அரசின்‌ 2024-2025ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல்‌ செய்வதற்கு முன்பாக நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு சந்தித்து வாழ்த்து பெற்றார்‌

உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, நிதித்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ த.உதயச்சந்திரன்‌, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ தமிழ்நாடு அரசின்‌ 2024-2025ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல்‌ செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு அவர்கள்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்று, பேரவைக்குள்‌ சென்றார்‌

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்

பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு? தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் கல்வி நிலையங்கள் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும். மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 […]

2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது. நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி […]

தமிழ்நாடு அரசு கோரிய நிதியை தராமல் பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார் – அமைச்சர் தங்கம் தென்னரசு

மக்கள் அனைவரும் அறிந்த புயல் வெள்ள பாதிப்பு செய்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் தெரியவில்லை. எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை விடுவிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களில் இன்னமும் மக்களை மீட்கும், காக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு அதிகமென்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுத்தார் – அமைச்சர் தங்கம் தென்னரசு.

“வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம்”

“வெள்ள நீர் வடிகால் பணிகள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை; எங்களது பணிகள் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன; வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது”

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு…

2011 டிசம்பரில் ‘தானே’ புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். ▪️2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள். ▪️2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த ‘ஒக்கி’ புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர். ▪️2018ல் ‘கஜா’ புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார். ▪️ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.

ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து தங்கம் தென்னரசுவுடன் அன்பில் மகேஸ் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து […]