தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 5ம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெற இருக்கின்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஜூலை மாத உண்டியலில், ₹3.09 கோடி ரொக்கம், 1900 கிராம் தங்கம், 29,000 கிராம் வெள்ளி, 30,000 கிராம் பித்தளை, 10,000 கிராம் செம்பு, 3,500 கிராம் தகரம் மற்றும் 552 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்!
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் கிழக்கு வாசல் ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் விரிசல்

சீர் செய்யாமல் நிலைகளில் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் ₨67 லட்சம் செலவில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் விளக்கம்
ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவதற்கான காரணம் என்ன…?

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும்.அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். […]
வம்சத்தை காக்கும் ஆடி மாத மாவிளக்கு வழிபாடு

ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும்.ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும். திரி நன்கு எரியும். நீளமான திரி […]
திருநங்கைகள் ஒன்று கூடி நடத்திய ஆடித் திருவிழா

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பதினாறாம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21 தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தலையில் கிரகமாக எடுத்து அப்பகுதியில் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட திருநங்கைகள் பலர் அம்மனுக்கு அழகு குத்தி வழிபட்டனர். ஊர்வலமாக சென்ற கரகம் பின்பு ஆலயம் வந்தடைந்தது. அங்கு பம்பை உடுக்கை சத்தங்கள் முழங்க திருநங்கை ஒருவர் சாமியாடியது அங்கு […]
ஜமீன் ராயபேட்டை ஸ்ரீ படவேட்டமன் கோயிலில் உலக நன்மைகாக திரு விளக்கு கூட்டு பிராத்தனை, 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலக நன்மைகாக 400 க்கும் மேற்படட் பெண்கள் விளக்குகளை ஏற்றிவைத்து, கணபதி பூஜை, குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக ஸ்ரீ படவேட்டம்மன் மூலவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடந்தபோது எடுத்தபடம்.
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
குரோம்பேட்டை பத்மநாப நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிவார முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை செய்யப்பட்டது. மாலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ கருமாரியம்மன் வளையலால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.