அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகின் மிகப் பெரிய பூட்டு

அயோத்தி ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க கையால் செய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார். இதன் உயரம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம் மற்றும் எடை 400 கிலோ எனக் கூறப்படுகிறது..
பழனி கோயில் பெயரை பயன்படுத்தி மோசடி

பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை என வாட்ஸப்பில் வெளிவரும் போலிதகவல் ஆடி கிருத்திகையன்று ஒருகோடி பேருக்கு அர்ச்சனை எனக்கூறி பணம்பறிக்கும் மோசடி கும்பல்… பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது

நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்ப்பு கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன. விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
குரோம்பேட்டை அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

குரோம்பேட்டை அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா மூன்றாவது வார ஆடி வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை அம்மனுக்கு பதினொரு மணியளவில் சிறப்பு தீபாதாரணை நடைபெற்று 12 மணி அளவில் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர் அன்னதான உபயம் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் சந்திரசேகரன் மன்னா என்ற ராஜேஷ் கண்ணா 38 வது வார்டு மாமன்ற […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப் பாதையில் கரடி வந்ததால் பரபரப்பு!

கடந்த மாதம் சிறுத்தை ஒன்று இதே நடைபாதையில் வந்து 4 வயது சிறுவனை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான 5 வகையான பிரதோஷ விரதங்கள்

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.திவ்யப் பிரதோஷம் பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.தீபப் பிரதோஷம் பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, […]
சென்னை கோலவிழி அம்மன்

சென்னை மாநகரில் மைலாப்பூரில் கோலவிழி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. சோழர்கள் காலத்தை சார்ந்தது. இங்கு அமைந்துள்ள கலைநயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் சிலை மிகவும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. சென்னையின் காவல் தெய்வமாக , மக்களை காத்து நிற்கிறாள் .சிறப்பு : இக்கோவிலில் இருக்கும் அம்மனின் சன்னிதியில் உருவமாக இருக்கும் உக்ரரூபம் கொண்ட அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். மேலே இருக்கும் சாந்த ஸ்வரூபமான […]
ராமேஸ்வரம் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்.

மத்திய அமைச்சருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. “ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்.” – அமித்ஷா
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்!

அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்!
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் விழாவில் இன்று (26.07.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ. ஜெனிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.