கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு தார்மீக உரிமை இல்லை …

கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு தார்மீக உரிமை இல்லை, அவர் தெலுங்கானாவிற்கும் புதுச்சேரிக்கும்தான் ஆளுநர், தமிழ்நாடு பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் இல்லை; அவர் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் உள்ள கோயில்களில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளதா என்பதை முதலில் பார்த்துவிட்டு பேச வேண்டும் ,சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர்.
உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்;அவர்களுக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல;பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் ஒன்று;ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு, எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவோம் என பிரதமர் மோடி கூறினார்;அதற்கு ஏற்ப பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”.
“உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரரும், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுகள்;

இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்திற்கும், நம் இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்”
இனி ஒன்றிய அரசு கையில் தான் உள்ளது: தமிழிசை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை, “மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் ஜூலை 22ம் தேதி ஆளுநர் மாளிகை வந்தது. விடுமுறை தினத்தில் கோப்பு வந்தது. ஆனால், கையெழுத்திட்டு உடனடியாக ஒன்றிய அரசுக்கு அனுப்பிவிட்டேன். இனி ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என விளக்கமளித்துள்ளார்.