தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் செயலாளர் தேவ் ஆனந்த் மற்றும் கல்லுரி துணை முதல்வர் திருப்பதி ஆகியோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.திவ்யா என்ற மாணவிக்கு இலவசமாக 4 ஆண்டுகள் B.E CS படிக்க அனுமதி அளித்தனர்

சேலையூர் உதவி ஆய்வாளர் முத்துராமன் பரிந்துரையின் பெயரில் இதற்கான ஏற்பாட்டை என்.வேணுகோபால் செய்தார். அனைவருக்கும் மாணவி திவ்யா நன்றி தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், மண்டலக்குழு தலைவர் எஸ்.இந்திரன் தலைமையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்

மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் உள்பட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார். இதில் மேயர் வசந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் தாம்பரம் போக்குவரத்து போலீசார் ஏற்பாட்டில் நீர் மோர், தண்ணீர் பந்தலை போக்குவரத்து உதவி ஆணையாளர் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார்
Tambaram 06 May 2024
தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் மெமோ

தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் உயர் அதிகாரிகள் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாம்பரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக நடத்துனர் ஆக இருப்பவர் சரவணன் இவர் இதுவரை ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை இன்று தனது திருமண நாளிலும் வேலைக்கு வந்திருந்தார் ஆனால் அவரை அநியாயமாக அதிகாரிகள் வழிமறித்து மிரட்டி மெமோ கொடுத்ததாக அவரே குற்றம் சாட்டினார் அவரது பரபரப்பான பேட்டி இதோ
செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]
தாம்பரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மே தின விழா உதவி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர் மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் […]
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில் மேம்பாலம் பராமரிப்பில் சீர்கேடு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது. அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை. மேலும் […]
தாம்பரம் இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் கண் முன்பு தங்கை உயிரிழப்பு

தாம்பரத்தில் இருசக்கர வாகனதின் மீது மினி லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழப்பு. அங்குள்ள சிசிடிவி காட்சி வெளியான பரபரப்பு சென்னை அடுத்த வெள்ளவேடூ பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி சிவபூஷனம், கண் சிகிச்சை பெற வெள்ள வேட்டில் இருந்து அவரின் அண்ணன் ஆனந்தனுடன் சேலையூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ( பாரத் கண் மருத்துவமனை ) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் மீண்டும் வெள்ள வேடூ செல்ல தாம்பரம் சி.டி.ஒ […]