கெட்டுப்போன இறைச்சி கிழக்கு தாம்பரத்தில் 2 உணவகங்கள் மூடல்

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள 6 பெரியளவிலான அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அதிகாரிகளுடன் தீவிர சோதனை நடத்தினார்.. அப்போது கெட்டுபோன உணவுகள், அழுகிய மற்றும் பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகள் போன்றவறை குப்பையில் கொட்டி அழித்தார். பின்னர் சுகாதாரமற்று நடத்தபட்ட 2 உணவகங்களை மூடியும், உரிமம் இன்றி நடத்தபட்ட ஒரு உணவகத்திற்கு விற்பனை […]
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், சேலையூர் ஜானகிராமன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Tambaram 27 Aug 2023
திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…