திருவஞ்சேரி ஊராட்சியில் மழை நீர் கால்வாய் அமைப்பு

புனித தோமையார்மலை ஒன்றியம் திருவஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் எனவும், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் மழை நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி, […]
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

இன்று (25.08.2023) முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாடம்பாக்கம், மாநகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தவைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…
ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், திருமலை நகர் பகுதியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள், ச.ஜெயபிரதீப், தூ.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]
தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

கிழக்கு தாம்பரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேரூக்கு பிரஷர் குக்கர் வழங்கினர்கள். அப்போது பேசிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் பல்வேறு விதங்களில் அதிக அளவு வளர்சி பெற்றுள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் உள்ளதால் அரசு தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அதற்கு […]
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் , டி.ஆர்.பாலு எம்.பி., க.செல்வம் எம்.பி., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்S.R.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
குரோம்பேட்டை மாணவர்களுக்கு பரிசு

தாம்பரம் மாநகராட்சி ஜமீன் ராயப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 23-வது மாமன்ற உறுப்பினரும், கல்வி குழு உறுப்பினருமான ந.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினர். பல்லாவரம் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே. […]