இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு விசா இல்லாமல் இன்று முதல் பயணிக்கலாம்.
நாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு:

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு. புதிய கப்பலுக்கு சர்வதேச பயணத்திற்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதில் சிக்கல்.
கடந்த 7ம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவு
ஓரிரு நாட்களில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என தகவல்
இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்: சுனாமி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று(11) அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் […]