ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பது விசேஷமானது. அம்மன் தனியே மூலதெய்வமாக கொலுவிருக்கும் கோவில்களில் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.அதே போல சிவன் கோவில்களில் தனி சந்நதியில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கும் பிரத்யேக ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன.அம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை மேற்கொண்டு அம்பிகையை மகிழ்விக்கிறார்கள்.அந்த வகையில் இங்கே சில அம்மன்களை தரிசிப்போம்.சாமுண்டீஸ்வரிவலக்கரங்களில் சூலம்,கத்தி,சக்தி, சக்கரம்,அம்பு, சங்கம்,வஜ்ரம், அபயம்,உடுக்கை, சிறிய கத்தி.இடதுகரங்களில் நாகம்,பாசம், கேடயம்,கோடரி, அங்குசம்,வில்,மணி, கொடி,கண்ணாடி ஆகியன ஏந்தியிருக்கிறாள்.மகிஷாசுரன்தன் தலை […]
ஜமீன் ராயபேட்டை ஸ்ரீ படவேட்டமன் கோயிலில் உலக நன்மைகாக திரு விளக்கு கூட்டு பிராத்தனை, 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலக நன்மைகாக 400 க்கும் மேற்படட் பெண்கள் விளக்குகளை ஏற்றிவைத்து, கணபதி பூஜை, குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக ஸ்ரீ படவேட்டம்மன் மூலவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
குழந்தைப்பேறு.. அருள் தரும் ஆடிப்பூரம்
ஆடி மாதத்தில் வரும் இந்த ஆடிப்பூர நட்சத்திர தினத்திலே சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் கூறுகிறது. மேலும், இதே ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே, ஆடிப்பூர நாளை சைவ மற்றும் வைணவ தலங்களில் சிறப்பாகவே கொண்டாடுகின்றனர். இதே ஆடிப்பூர நாளில்தான் சித்தர்களும், முனிவர்களும் தங்களது தவத்தை தொடங்குவார்கள் என்று ஆன்மிக அறிஞர்களும் தெரிவிக்கின்றனர். இந்த ஆடிப்பூரமானது அம்பாளுக்குரிய நாள் ஆகும்.ஆடிப்பூர தினத்தில் அம்மனை வழிபடும் […]
ஆடி மாதத்தில் வரும் 2 அமாவாசைகள் : எந்த நாளில் ஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும்?

ஆடி மாதம் சுப காரியங்களை தவிர்க்க வேண்டிய மாதம் என்பார்கள். இது தேவர்களின் இரவு பொழுது என்பதால் அவர்களுக்கான பூஜைகளை ஏற்றுக் கொண்டு ஆசிகளை வழங்குவதற்கு அவர்கள் வர மாட்டார்கள். அதனாலேயே இந்த மாதத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதே சமயம் ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மிக முக்கியமான புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. அம்மன் அருளையும், முன்னோர்களையும் ஆசியையும் பெற ஏற்ற மாதமாகும்.ஆடி மாதத்தில் பலர் விரதம் இருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். […]
நாக வழிபாடு எப்படி தோன்றியது?

தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான். இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின. நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது. முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது […]
கால பைரவ அஷ்டமி விரதம்

எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். […]
பூஜைக்கு ஆகாத மலர்கள்

அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த […]
சனிக்கிழமை பிரதோஷ விரதம் தரும் பலன்கள்

வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.சனிக்கிழமைகளில் சனியின் […]