மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌

இன்று (27.9.2024) புதுதில்லியில்‌,அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ நாடாளுமன்ற குழுத்‌ தலைவர்‌ திருமதி சோனியா காந்தி அவர்களைசந்தித்துப்‌ பேசினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழகநாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி & பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்

மாநிலங்களவை எம் பி ஆகிறார் சோனியா காந்தி

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியாக காந்தி மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய பிப்.15-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோ்வு செய்வது குறித்து, தில்லியில் அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வீட்டில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் […]

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமைகளை […]

நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை தெரிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு I.N.D.I.A. கூட்டணி சார்பில் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்களை குறித்து விவாதிக்கவும் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

சோனியா தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

செப் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் டெல்லியில் சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவும் முடிவு.

சந்திராயன்-3 விண்கலம்: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி பாராட்டு

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. இஸ்ரோ நேற்று மலை மாபெரும் சாதனையை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சோனியா காந்தி தலைமையில் எம்பிக்கள் கூட்டம்

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பேசும்போதோ அல்லது விவாதம் நடக்கும்போதோ சபைக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க இன்று சிபிபி தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் லோக்சபா எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு விருந்தளித்து, நடனமாடிய சோனியா காந்தி

சோனியா காந்தி அரியானா பெண் விவசாயிகளை நேற்று(ஜூலை 16) மதிய உணவிற்கு வருமாறு அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, இல்லத்திற்கு வந்த பெண் விவசாயிகளை சோனியா காந்தி வரவேற்றார். பின்னர் அவர்களுடன் நடனமாடி, மதிய உணவு பரிமாறி மகிழ்ந்தார். இந்த விருந்தில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.