கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறை கற்கள் நடுவே ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது
இந்த வீடியோ கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும்போது பாறை மீது அமர்கிறவர்கள் கவனிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டு அந்த படங்களை பலரும் பகிர்ந்தனர். இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று சிலர் தெரிவித்த போதிலும், சமூக வலைதளவாசிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரையில் பாம்பு குவியல் என பகிர்ந்து வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் தகவலை பதிவிட்டுள்ளது. […]
பர்கூர் அருகே பாம்பாற்றில் மீனுக்கு விரித்த வலையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
பர்கூர் அருகே உள்ள செக்கில்நத்தம் பகுதியைச் சேர்ந்த சிலர் அருகே உள்ள பாம்பாற்றில் மீன்பிடிக்க நேற்று முன்தினம் இரவு வலை விரித்து வைத்து இருந்தனர். இதனிடையே நேற்று காலையில் வலையை சென்று பார்த்தபோது அதில் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து நேரலக்கோட்டை காப்புக்காட்டில் விட்டனர்.
சேலையூரில் லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்த பாம்பு
தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சையத், இவர் வீட்டில் இரும்பு கம்பி கூண்டில் லவ் பேட்ஸ் ஜோடிகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் காலை பார்த்தபோது லவ்பேட்ஸ் அலறியவாறு ஒரே பானை மீது அமர்ந்து அச்சத்துடன் இருந்துள்ளது. இதனால் கூண்டில் பார்த்தபோது பாம்பு ஒன்று பதுங்கியதை பார்த்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலமாக லவ்பேட்ஸ் பானை கூட்டில் பதுங்கிய 4 அடி நீளமுள்ள […]