சந்திராயன் – 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி எனபெயர் சூட்டிய மோடி

இந்திய விண்கலம் சந்திராயன் -3 நிலவில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் செயற்கைக்கோளின் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி முனை என்று பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தபோது இந்த பெயரை சூட்டினார். இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 2- இறங்கிய இடத்திற்கு திரங்கா (மூவர்ண கொடி) என்று மோடி பெயர் சூட்டியுள்ளார்.