சிவகார்த்திகேயன் 10 லட்சம்”மிக்ஜாம் புயல்” பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் காசோலையைஅமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக் கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சி S.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை சரளா 2022-2023ம் […]

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

‘மாவீரன்’ படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதற்கான பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் கமிட் ஆகியுள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஓரிரு வாரங்களில் இப்படத்தில் கையெழுத்திட உள்ளார். ‘சீதா ராமம்’ மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மிருணாள் தாக்கூர்.

குரோம்பேட்டை தியேட்டரில் மாவீரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இன்று வெளியான மாவீரன் முதல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தி, படத்தின் காதாநாயகி ஆதிதீ சங்கர், நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஜய் உள்ளிட்டவர்கள் படம் பார்த்தனர். அதனை தொடர்து சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்….