எடப்பாடி மீது செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்புப் பேட்டி அளித்திருக்கிறார். ‘’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்தவன் நான். கொடநாடு கொலை வழக்கில், A1-ல் இருக்கிறார் இபிஎஸ். பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தொடந்து தோல்வியைத் தழுவியது. எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
செங்கோட்டையன் கெடு முடிந்தது
ஹரித்துவார் செல்வதாக டெல்லி சென்று விட்டு வந்த செங்கோட்டையன் அதன்பிறகு மௌனமாகி விட்டார். எடப்பாடிக்கு விதித்திருந்த 10 நாள் கெடு முடிந்து விட்ட நிலையில் இன்று ஏதாவது ஒரு முடிவை அறிவிப்பார் என்று தொண்டர்கள் ஏராளமான அவர் வீட்டு முன் குவிந்திருந்தனர் . அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொண்டர்களின் கருத்துக்களை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி வலிமை பெறுவதற்கும் 2026 ல் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுக்கிறேன். பிரிந்தவர்கள் […]
செங்கோட்டையனுக்கு சசிகலா ஆதரவு
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்த்து கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார் அவரது கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார் சசிகலாவும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார் தன் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்
வாய்ப்பை தியாகம் செய்தேன்” செங்கோட்டையன்.
ஏழை, எளிய மக்களுக்கான இயக்கம் அதிமுக,இயக்கத்திற்கு பல்வேறு தடுமாற்றம் வரும் போது நான் செய்த பணிகள் பற்றி பாராட்டினார் ஜெயலலிதா அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கஎந்த தியாகமும் செய்ய தயாராக இருந்தேன், இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதை தியாகம் செய்தேன்”செங்கோட்டையன்