சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் திறன் விருது மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது

திறன் விருது எல்.விஜயலட்சுமி, எல்.ஹக்னிமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த பள்ளி துணை ஆய்வாளர் கிருபாகரன், திட்ட அலுவலர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.
குரோம்பேட்டை நேருநகர், ஸ்ரீ அய்யாசாமி அய்யர் துவக்க பள்ளியில் சென்றவாரம் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறை செயல்பாடுகளான கதை, நாடகம், தனிநடிப்பு, உரையாடல், பாடல், கும்மி, வில்லுப்பாட்டின் மூலம் எண்ணும், எழுத்தும் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முன் சிறப்பாக நிகழ்த்தி காட்டினார்கள். பெற்றோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

09/03/24 (சனிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.R.கார்த்திக் [CEO – R.K. Groups] மற்றும் Dr.B.ரேஷ்மி கார்த்திக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பள்ளி தாளாளர் Rev.Sr.அல்போன்சா பீட்டர் மற்றும் தலைமை ஆசிரியை Rev.Sr.செலின் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் சேர்க்கை விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 7397397940/ 7200014829.
குரோம்பேட்டை நவபாரத் பள்ளியில் 21 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

நான் முதல்வன் திட்ட ஆலோசகர் டி.கலைசெல்வன்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பங்கேற்பாளர்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.மாணவர்கள் நடனம், நாடகம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பட்டம் வழங்கபட்டது.
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்-தமிழ்நாடு அரசு.
மக்களவைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
அதேபோல வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4-க்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பாசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலையில் மாடம்பாக்கம் மாநகராட்சி துவக்க பள்ளியில் கல்வி நிதி (2023-24) கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உருப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதைபொருள் விற்றதற்க்கு 2138 பேர் மீது வழக்கு போடப்பட்டது..

ஆனால் இந்த விடியா திமுக அரசு கைது செய்ததோ 148 பேர் தான்.. கைது செய்யப்படாத மீத நபர்கள் திமுகவை சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் வருகிறது
தமிழகம் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது

ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.