சிட்லபாக்கத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் செவி & பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் அரசு பள்ளி கல்வி மேலாண்மை கட்டமைப்பு குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த கட்டமாக அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலை திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அப்பள்ளியில் ஆசிரியர்களை வணங்குவதையும், பள்ளிக்கு செல்வதற்கு முன் தாய் தந்தையரை வணங்குவதையும் குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.

அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சை பேசிய மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சென்னை அழைத்து வருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர்

ஆக.20-ம் தேதி வழங்கப்பட்ட மாறுதலில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.

குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி நேரு பார்க் துப்புரவு பணிகளை ஜெய் கோபால் கரோடியா பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மேற்கொண்டனர்

சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பிரதாப், சுனில், சீனிவாசன், கே.பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர். தாமரைக்கண்ணன் நன்றி தெரிவித்தார்.

70 பேர் தேசியக்கொடி வரைந்து உலகசாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை […]

ரக்‌ஷா பந்தன் – பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

டெல்லியில் பள்ளி குழந்தைகளிடம் ராக்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து “உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் செழிப்பையும் கொண்டு வரட்டும்”

டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

9 வது முறையாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

கார்கில் போர் வெற்றியின் 25 வது ஆண்டு விழா அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கார்த்திக் கண்ணன், முன்னிலை வசித்தார். மக்கள் இயக்க நிர்வாகி வெங்கட்ராமன் மூ.கு.கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சினிமா துணை இயக்குநர். மற்றும் முனுசாமி வரதன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் போர்வீரர் நினைவு ஸ்தூபிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் இணையும் மாணவர்கள் ஆதார் எண் இணைத்து மனு செய்ய வேண்டும்.ஏற்கனவே மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.