சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்

99% சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்தான் நடக்கிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மட்டுமே சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் என ஜிவால் கூறினார்.

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்

செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் பொறுப்பேற்பு!

தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் பொறுப்பேற்றார். தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற்றதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது பொறுப்பேற்றார். புதிய தலைமை […]