BREAKING | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
ஆளுநர் மாளிகையில்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற பதவியேற்பு விழாவில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வி. செந்தில் பாலாஜி அவர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் 34 வது தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீ ராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்..
சென்னை உயர்நீதி மன்றத்தின் 34 வது தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீ ராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பங்கேற்பேன்: பொன்முடி

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நானும் கலந்து கொள்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
21,000 விநாயகர் சிலை கண்காட்சியில் தமிழக கவர்னர் ஆர் என். ரவி.

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். விநாயகர் கண்காட்சி சிறப்பாக இருந்தாக ஆளுநர் பாராட்டினார். சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் […]
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்பு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி