ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையாகிறது
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை 3% உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45% ஆக உயரும் என்றும், ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
தங்கம் விலை; சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் இன்று (ஆக. 05) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,440க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,555க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 0.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.50க்கும், 1 கிலோ வெள்ளி ரூ. 78,500க்கும் விற்பனையாகிறது.
சென்னை, கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ₨110க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்துள்ளது. 1,100 டன் தேவைப்படும் நிலையில் 400 டன் வந்துள்ளதால் தக்காளி விலையேற்றம் கண்டுள்ளது.
பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை உயர்த்தியது ஆவின் நிர்வாகம்

1கிலோ பன்னீர் ரூ.450 லிருந்து ரூ.550 ஆகவும் 200கி பாதாம் பவுடர் ரூ.100 லிருந்து ரூ.120ஆக உயர்வு
ஐடிபிஐ வங்கியின் நிகர லாபம் 61.9% உயர்வு

ஐடிபிஐ வங்கியின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வங்கி வழங்கியுள்ள தரவுகளின்படி, நிகர லாபம் 61.9% அதிகரித்து ரூ.1,224.2 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.756.4 கோடியாக இருந்துள்ளது. நிகர வட்டி வருமானம் (NII) 60.7% அதிகரித்து ரூ.2,487.5 கோடியிலிருந்து ரூ.3,997.6 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வரம்பு (NIM) 178 bps வளர்ச்சியைக் கண்டுள்ளது.
HDFC AMC நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்வு

HDFC AMC நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழங்கப்பட்ட தரவுகளின்படி நிறுவனத்தின் லாபம் 52% அதிகரித்து சராசரி சொத்து மதிப்பு ரூ.4.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.477.5 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டில் ரூ.314.2 கோடியாக இருந்துள்ளது. வருவாய் 10% அதிகரித்து ரூ.574.5 கோடியாக உள்ளது.
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 20 விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.