அரிசி கழுவிய நீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் சருமம் மற்றும் முடி பாராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.இந்த நீரைக் கொண்டு முகம் கழுவும் பொழுது துளைகள் வழியாக நீர் உள்ளே சென்று உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.அதேபோல் தலைமுடியை இந்த நீரைக் கொண்டு அலசும் பொழுது தலைமுடி மென்னையாகிறது.வறட்சி நீங்கி, முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

சென்னையில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.200 உயர்வு

சென்னை:தமிழகத்தில் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அரிசி விலையும் உயர்ந்தது. கடந்த 2 வாரமாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் அனைத்து அரிசி வகையும் 25 கிலோ மூட்டை ரூ.200 வரை அதிகரித்துள்ளது.ரூ.900 ஆக இருந்த சாப்பாடு அரிசி கடந்த 10 நாட்களில் 50 ரூபாய் வீதம் படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ரூ.1200 ஆக […]

கர்நாடகாவுக்கு அரிசி தர மறுத்த மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் குறைந்த அரிசி உற்பத்தி; ஆர்.என்.ரவி

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள கோசலை பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் விவசாய பண்ணையில் விவசாயிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டில் 7% இருந்த அரிசி உற்பத்தி தற்போது 5.2%ஆக குறைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உற்பத்தியை மேம்படுத்த ரசாயன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியதன் காரணமாக மண்ணின் தன்மை குறைந்து விட்டது” என்றார்.