பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது….

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது ஜனவரி 11ல் பயணம் செய்வோர் நாளையும், ஜனவரி 12ல் பயணம் செய்வோர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வோர் செப்டம்பர் 15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

மக்களே தயாராகுங்க.. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்..!.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (செப்.13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது. ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு […]

ரயில்கள் தாமதத்தால் பயணம் செய்யாதோருக்கு முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும்: ரயில்வேதுறை தகவல்

ரயில்கள் தாமதத்தால் பயணம் செய்யாதோருக்கு முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்களில் பயணம் செய்யாதவர்களுக்கு முழு பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யாத பயணிகள் நிலைய அதிகாரிகளிடம் காலதாமத சான்று பெற்று பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு 12ம் தேதி தொடக்கம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12ம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.