“பாசஞ்சர் ரயில் கட்டணம் குறைப்பு ” பயணிகள் மகிழ்ச்சி
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது

பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு தக்காளி கிலோ ரூ.10 குறைந்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை ரூ.200 வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி […]
மேலும் குறைந்த தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு சந்தையில் இன்று(ஆக.11) தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. முதல் தர தக்காளி நேற்று(ஆக.10) ரூ.70 ஆக இருந்த நிலையில், ரூ.10 குறைந்து இன்று ரூ.60க்கு விற்பனையாகிறது. 2ம் ரக தக்காளி ரூ.50க்கும், 3ம் ரக தக்காளி ரூ.20க்கும் விற்கப்படுகிறது. ரூ.200க்கு விற்று வந்த தக்காளி விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ₨20 குறைவு
தக்காளி விலை மேலும் குறைவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது. ஆக.2 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தக்காளி விலை ரூ.60 ஆக குறையும்

கர்நாடகாவின், கோலாரில் உற்பத்தியாகும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். ஆனால், தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக தக்காளி செல்வதில்லை. விலை உயர்வால், மக்களிடம் தக்காளி பயன்பாடும் குறைந்துள்ளது. இந்நிலையில் கோலாரில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-70க்கு விற்கப்படும் என வியாபாரிகள் கூறினர். அதற்கு, இன்னும் 1 மாதம் காத்திருக்க வேண்டும்.
தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ 30 குறைந்தது

சென்னையில் நேற்று 150க்கு விற்ற தக்காளி இன்று ரூ.120க்கு விற்பனை
தக்காளி விலை குறைந்தது!

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 40 குறைந்து, ₹80 மற்றும் ₹90க்கு விற்பனை! நேற்று ₹130க்கு விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ₹100க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ ₹100 வரை குறைந்துள்ளது. […]